News September 18, 2024
நெல்லை ரயில் இன்று முதல் பகுதி தூரம் ரத்து

செங்கோட்டை – ஈரோடு இடையே இயக்கப்படும் ரயில் திண்டுக்கல் அருகே ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் 23ம் தேதி வரையும் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரையும் அக்டோபர் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரையும் ஈரோடு திண்டுக்கல் இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் அம்பை, நெல்லை வழியாக செல்வதால் அப்பகுதி பயணிகள் ரயில்வே அறிவிப்புக்கு ஏற்க அமைத்து கொள்ளுமாறு கோட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
நெல்லை: ரேஷன் காட்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News November 15, 2025
நெல்லை: சிறுத்தை தாக்கியதில் பெண் காயம்

காரையாரில் வசித்து வருபவர் ஜோயி. இவரது மனைவி சுஜதா இத்தம்பதியினருக்கு இரண்டு ஆண் மகன்கள். அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி. இவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர்கள் குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டில் வளர்த்து வரும் நாயை பிடிக்க வந்த சிறுத்தையை தடுக்க முயன்ற போது சிறுத்தை தாக்கியதில் சுஜாதா காயமடைந்தார்.
News November 15, 2025
நெல்லை: 10th முடித்தால் அரசுப் பள்ளியில் வேலை உறுதி!

நெல்லை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச.4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <


