News September 18, 2024

அரசு டவுன் பஸ் – டூவீலர் மோதல்: ஒருவர் பலி

image

வாலிநோக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மீரான் முகைதீன், 42. இன்றிரவு இவர் டூவீலரில் கீழக்கரையில் இருந்து வாலிநோக்கம் திரும்பினார். கீழக்கரை தாலுகா அலுவலகம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த அரசு டவுன் பஸ் டூவீலர் மீது மோதியதில் மீரான் முகைதீன் இறந்தார். கீழக்கரை போலீசார் அவரது உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 20, 2024

இரவு ரோந்து அதிகாரியின் விவரம் வெளியீடு

image

இன்று (20.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

மாலை 4 மணி நிலவரப்படி 1,641 மிமீ மழை பொழிவு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6  மணி முதல் மாலை 4 வரை ராமேஸ்வரம் 411, தங்கச்சிமடம் 322, மண்டபம் 261, பாம்பன் 237, ராமநாதபுரம் 75, கடலாடி 71.20, வட்டாணம் 65.60, முதுகுளத்தூர் 48.20, கமுதி 45.80, பள்ளமோர்குளம் 45. 20, பரமக்குடி 25.60, திருவாடானை 11.80 என மாவட்டம் முழுவதும் 1,641.80 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் இருந்த குடிசைகளை மழை நீர் முழுவதுமாக சூழ்ந்தது.

News November 20, 2024

பாம்பனில் மேக வெடிப்பால் மிக கனமழை

image

ராம்நாடு மாவட்டம் பாம்பனில் மிகக்குறுகிய இடத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக கனமழை பெய்துள்ளது. மேகவெடிப்பால் பகல் 11.30 மணி முதல் 2.30 மணி வரை பாம்பனில் 19 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மிக குறுகிய இடத்தில் வலுவான மேக கூட்டங்களால் மேக வெடிப்பு நிகழ்ந்து கனமழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.