News September 18, 2024

இன்று முதல் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

image

மதுரை ரயில்வே கோட்டத்தில் கூடல்நகர்- சமயநல்லூர், மதுரை – கூடல்நகர், மதுரை – திண்டுக்கல் தடத்தில் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, இன்று (செப்.18) முதல் அக்.8 வரை இத்தடத்திலான ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு – செங்கோட்டை விரைவு ரயில் இன்று முதல் அக்.7 வரை திண்டுக்கல் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Similar News

News August 24, 2025

சோழவந்தான் தொகுதிக்கு நாதக வேட்பாளர் அறிவிப்பு

image

வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாகலட்சுமி திருமாறன் என்பவரை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். அதற்கு வேட்பாளர் சார்பாக நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பதுடன் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.

News August 24, 2025

மதுரையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

மதுரை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000449, 9445000450, 8870678220, 9003314703 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News August 24, 2025

மதுரை: புகார் அளிக்க இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க?

image

மதுரை மக்களே நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவையில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பணம் கொடுத்து வாங்கிய பொருளில் காலாவதி, கெட்டுப்போன, போலியானவை போன்ற குறைகள் இருந்தால், அதன் Bill-யை வைத்து சட்டப்படி மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிப்பதன் மூலம் இழப்பீடு பெற முடியும். அல்லது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அதிகாரியை (94450-00335) அணுகலாம். SHARE பண்ணவும்

error: Content is protected !!