News September 17, 2024

கிளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் அனுமதி கோரியது

image

பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்தில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க இன்று சுற்றுச்சூழல் அனுமதி கோரியது. இந்த தொழிற்சாலையானது, பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.640 கோடியில் அமைய உள்ளது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Similar News

News August 13, 2025

APPLY NOW: காஞ்சிபுரம் கூட்டுறவு துறையில் வேலை

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையின் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலிப் பணியிடங்கள் உள்ளன. காஞ்சிபுரத்தில் 49 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த <>இணையதளத்தில்<<>> வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9043046100 எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்

News August 13, 2025

காஞ்சிபுரத்தில் 9,747 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

image

சென்னையில், 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை காஞ்சிபுரத்தில் 9,747 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் தொற்றால் 1 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.

News August 13, 2025

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க இங்கு போங்க

image

காஞ்சிபுரம் இன்று (ஆகஸ்ட்.13) காஞ்சிபுரம், குன்றத்தூரர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த <>லிங்கை கிளிக் <<>>செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!