News September 17, 2024
பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்

நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், காவல்துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டு வருகிற வடகிழக்கு பருவ மழை நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
Similar News
News November 13, 2025
குன்னூரில் தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

குன்னுார் பழைய ஆஸ்பத்திரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன், உமாராணி தம்பதி. இவர்கள் கடந்த மாதம், 27ல் அன்னுாரில் உள்ள உறவினர் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று, 29ல் திரும்பியுள்ளனர். இந்நிலையில், ‘நேற்று வீட்டில் உள்ள நகையை அடமானம் வைக்க, பீரோவில் பார்த்த போது, 31 பவுன் வரை நகைகள் காணவில்லை,’ என, குன்னுார் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 13, 2025
காட்டேரி பகுதியில் பூத்துக் குலுங்கும் மலர்கள்!

குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரங்களில் ஏராளமான சேவல் கொண்டை மலர்கள் பயிரிடப்பட்டுள்ளன. சீசன் காரணமாக இந்த மரங்களில் சிவப்பு நிறத்தில் சேவல் கொண்டை மலர்கள் அடர்த்தியாக பூத்து குலுங்கி வருகின்றன. இதை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுலாப் பயணிகளும் கண்டுகளித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
News November 12, 2025
நீலகிரி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!


