News September 17, 2024
புதுக்கோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் இருபதுக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் ஐடிஐ டிப்ளமோ போன்ற கல்வித் தகுதி உடைய 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தங்களது சுய விவரங்களுடன் கலந்து கொள்ளலாம்.
Similar News
News August 23, 2025
இந்திய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக அழைத்து பேசி தீர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் ஆதரவு போராட்டம் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுக்கோட்டை மண்டல தொழிலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் 100க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
News August 22, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10, மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News August 22, 2025
புதுகை: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு !

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய 6 கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <