News September 17, 2024
கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை நிலவரம்

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ வெங்காயம் ரூ.60க்கும், சின்ன வெங்காயம் ரூ.75க்கும், தக்காளி ரூ.35க்கும், உருளைக்கிழங்கு ரூ.45க்கும், பீன்ஸ் ரூ.50க்கும், சவ், முள்ளங்கி மற்றும் வெண்டைக்காய் ரூ.20க்கும், முட்டைக்கோஸ் ரூ.15க்கும், புடலங்காய் ரூ.25க்கும், பாகற்காய் ரூ.35க்கும், முருங்கைக்காய் ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News September 15, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (15.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News September 15, 2025
சென்னையில் விஜய் பிரசாரத்திற்கு தவெக மனு

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 25 வரை சென்னை முழுவதும் தங்களது கட்சியின் சார்பில் பிரசாரம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தவெக கட்சி சார்பில் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் மக்களுக்கான செயல்திட்டங்களை விளக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள், பிரச்சார வாகனங்கள், துண்டுப்பிரசுரங்கள் மூலமாக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
News September 15, 2025
சென்னையில் கூடுதலாக பருவ மழை; வானிலை ஆய்வு மையம்

சென்னையில் வழக்கத்தை விட கூடுதலாக பருவ மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் தென்மேற்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 18% கூடுதலாகவும், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று வரை 3% குறைவாகவும் பெய்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.