News September 17, 2024
கரூர் எஸ்பி மாணவர்களுக்கு நிதியுதவி

கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு, (2023-2024) கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக, சிறப்பு கல்வி உதவித்தொகை ரூ.30,000த்தை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா நேற்று வழங்கி பாராட்டினார்.
Similar News
News November 10, 2025
கரூர்: ஓய்வு பெற்ற ஆசிரியர் கார் மோதி பலி!

மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் பெரியசாமி (80) நேற்று காலை மொபட்டில் மகாதானபுரம் சென்ற இவர், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், மகாதானபுரம் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்த போது கார் மோதி படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 10, 2025
கரூர் அருகே கோர விபத்து; மூதாட்டி படுகாயம்

கரூர், தாந்தோணி மலை வெங்ககல்பட்டியைச் சேர்ந்த தங்கமணி (60) நேற்று வெங்ககல்பட்டி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத பைக் மோதி காயமடைந்தார். அவருக்கு வலது முழங்கால், இடது கையில் காயம் ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து தங்கமணி புகாரின் பேரில் தாந்தோணி மலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 9, 2025
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு துவங்கி வைக்கும் ஆட்சியர்!

கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாளை(10.11.25) காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்கும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்க உள்ளார்கள். மேலும் இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்களும் அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள்.


