News September 16, 2024
போக்சோ வழக்கு கைதி செய்யப்பட்டவர் மாரடைப்பால் பலி

பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அனீஸ்அகமது (42). இவர் பெற்ற மகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது இதையடுத்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
Similar News
News August 22, 2025
வேலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-22) நடக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். குறிப்பாக, மகளிர் உதவித்தொகை பெற முடியாத பெண்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 22, 2025
வேலூர் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் கலந்து கொண்டு அறிவுரை வழங்க உள்ளார். எனவே விழா குழுவினர்கள் இதில் கலந்து கொள்ள அழைத்துள்ளனர்.
News August 22, 2025
வேலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வேலூர் மாவட்டத்தில் நாளை ஆகஸ்ட் 22 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள். 1. வேலூர் மாநகராட்சி, ஆனை குளத்தம்மன் கோயில் சமுதாயக்கூடம் கொசப்பேட்டை 2. காட்பாடி ஊராட்சி ஒன்றியம் ரேணுகாம்பாள் மஹால் வஞ்சூர் 3.அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வரதலம்பட்டு என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.