News September 16, 2024
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் தேனி மாணவர்கள் சாதனை

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக திருக்குறள் முற்றோதல் போட்டியில் கூடலூர் என்.எஸ்.கே.பி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சிவ சூர்யா மற்றும் சிவசந்துரு ஆகிய இரண்டு மாணவர்கள் 1330 குரல்களை ஒப்புவித்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரிடம் தலா 15000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு மாணவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரிய பெருமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News July 7, 2025
போடியில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

போடியில் 5வது வார்டு திமுக சார்பில் 10வது மற்றும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டும் விழா திமுக போடி நகர் செயலாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட திமுக நகரச் செயலாளர் முதல் பரிசு 3000, 2ஆம் பரிசு 2000, 3ஆம் பரிசு 1000 வழங்கினார். மேலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு நோட்டுகள், பேனாக்கள், பென்சில் வழங்கப்பட்டது.
News July 6, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 06.07.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News July 6, 2025
தேனியில் இலவச Tally பயிற்சிக்கு வரவேற்பு

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜூலை 18 முதல் கணினி மயமாக்கப்பட்ட கணக்கியல் (டேலி) பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம் என மைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க