News September 16, 2024

வங்கியில் மோசடி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு மாநில இணை பொதுச்செயலாளர் சரவணன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் “பொங்கலூரில் உள்ள ஒரு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைக்கிற நகைகளை போலியாக மாற்றி பல்வேறு மோசடிகளை செய்து வருகிறார்கள். எனவே, நகைகளை மோசடி செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2024

திருப்பூரில் 3நாட்களுக்கு ஆதார் சிறப்பு முகாம்

image

திருப்பூர் அஞ்சல் தெற்கு உட்கோட்டம் மற்றும் திருப்பூர் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நாளை நவ 21ஆம் தேதி தொடங்கி 23 தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது, குமரன் சாலையில் உள்ள லயன்ஸ் சங்க கட்டிடத்தில் நடக்கும் முகாமில் முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச ஆதார் கார்டு எடுப்பது போன்றவற்றை தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.

News November 20, 2024

போதைபொருள் விற்பனை -கலெக்டர் எச்சரிக்கை!

image

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து துறைவாரியாக ஆய்வு நடந்தது. மேலும் தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பை தொடர்ந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். போதைப் பொருள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்தார்.

News November 20, 2024

திருப்பூர்: 265 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி தினமான கடந்த ஒன்றாம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிராம சபை கூட்டம் வருகின்ற 23ஆம் தேதி காலை 11 மணிக்கு அந்தந்த ஊராட்சிகளில் உள்ள பொது இடங்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.