News September 16, 2024
முதலியார்பேட்டையில் முதல்வர் தொடங்கி வைத்தார்

முதலியார்பேட்டை தொகுதியில் குழந்தை ஏரியின் கிழக்கு கரையின் மேல் அரும் பார்த்த புரம் வழிச்சாலை வேல்ராம்பட்டு பிரதான சாலை இணைப்பதற்கு தார் சாலை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது. இந்த பணிகளை முதலமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News September 15, 2025
புதுச்சேரி: டென்னிஸ் போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரியில் என்.ஆர் கோப்பைக்கான ஆல் இந்தியா லெவல் டென்னிஸ் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கோரிமேட்டில் தொடங்கியது. போட்டியில், தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 553 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.நேற்று இரவு இறுதிப் போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
News September 15, 2025
புதுச்சேரி: எம்.எல்.ஏ நேரு கோரிக்கை

புதுச்சேரியில் தமிழுக்காக போராட்டம் நடத்துபவர்கள் வணிக நிறுவனங்களுக்கு சென்று விளம்பரம் மற்றும் பெயர்ப் பலகைகளை அடித்து நொறுக்குவது ஏற்புடையதல்ல. தமிழுக்கான இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறக்கூடாது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை நொறுக்கி சேதப்படுத்துவது வருந்தத்தக்கது. எனவே இச்செயலில் ஈடுபட வேண்டாம் என எம்.எல்.ஏ நேரு தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
புதுவை அரசு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி

திருக்கனுார், கூனிச்சம்பட்டு அண்ணா அரசு பள்ளியில் ‘மிஷன் வீரமங்கை’ என்ற தலைப்பில் தற்காப்புக் கலை பயிற்சி நிறைவு விழா பள்ளி வளாகத்தில் சீனியர் எஸ்.பி., ஈஷா சிங் ஏற்பாட்டில் நடந்தது. விழாவில், திருக்கனுார் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா கலந்து கொண்டு, தற்காப்புக் கலை பயிற்சியில் சிறந்து விளங்கிய 5 மாணவிகளுக்கு வீரமங்கை விருதும், பங்கு பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கினார்.