News September 16, 2024

பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து

image

திருப்பூர், நெருப்பெரிச்சல் ஜிஎன் கார்டன் பகுதியில் முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. வடக்கு தீயணைப்பு துறையினர் 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். திருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 10, 2025

திருப்பூரில் தவறி விழுந்தவர் பலி

image

திருப்பூர், வெள்ளியங்காடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்து ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த, திருப்பூர் தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் GH-க்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், இறந்தவர் அந்த பகுதியை சேர்ந்த நாகராஜ் (58) என்பதும், வலிப்பு ஏற்பட்டு கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

News November 9, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 09.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கேயம், அவிநாசி பகுதி மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

News November 9, 2025

வெள்ளகோவிலில் அடித்தே கொலை

image

வெள்ளகோவில் அருகே கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (77), இவரது மனைவி புஷ்பாத்தாள் (67). கடந்த 10 ஆண்டுகளாக இத்தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், நேற்று இரவு இதே போல் இவர்களுக்குள் மீண்டும் ஏற்பட்ட தகராறு ஏற்பட கட்டையால் புஷ்பாத்தாளை, பெரியசாமி தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார். இதனையடுத்து பெரியசாமி-யை கைது செய்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!