News September 15, 2024
மதுரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருக்கும் 1,05,002 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதிக்காக, நொடிக்கு 1130 கனஅடி நீர் திறக்கப்பத்துள்ளது. வைகை அணைக்கு நொடிக்கு 561 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், நொடிக்கு 1130 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (ஆக.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாருக்கேனும் அவர்களின் உதவி தேவைப்பட்டால், அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர உதவிக்கு 100 தொடர்பு கொள்ளலாம்.
News August 24, 2025
மதுரை: அடிப்படை பிரச்னைக்கு உடனே தீர்வு

மதுரை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
News August 24, 2025
சோழவந்தான் தொகுதிக்கு நாதக வேட்பாளர் அறிவிப்பு

வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாகலட்சுமி திருமாறன் என்பவரை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். அதற்கு வேட்பாளர் சார்பாக நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பதுடன் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.