News September 15, 2024
ALERT: இரண்டு பான் கார்டுகள் வைத்திருக்கலாமா?

வருமான வரித்துறை விதிகளின்படி (139A), ஒரு நபர் இரண்டு பான் கார்டுகளை வைத்திருக்க கூடாது. இரண்டு கார்டுகள் இருந்தால் ஐடி சட்டம் 1961 பிரிவு 272இன் கீழ் ₹10,000 அபராதம் விதிக்கப்படும். எனவே இரு அட்டைகள் இருந்தால் ஒன்றை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். வரி செலுத்துவோரது நிதி பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும், முறைகேடுகளைச் சரிபார்க்கவும் 10 இலக்க எண் கொண்ட Pan Card-ஐ மத்திய அரசு ஒதுக்குகிறது.
Similar News
News August 11, 2025
மழைக்காலத்தில் இருமல் பிரச்சனையா?

மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டது.
*தீராத இருமலுக்கு தேன் மிகச்சிறந்த மருந்து. தொண்டையின் உள்பகுதியில் இருக்கும் புண் மற்றும் அரிப்பை தேன் குணப்படுத்தும். *உப்புநீரில் வாய்க் கொப்பளித்து வந்தால் தொண்டையில் உள்ள நோய்க்கிருமிகள் அழிந்து, இருமல் தீரும். *சளி, இருமலை குணப்படுத்த இஞ்சியும் உதவும். இதை இஞ்சி டீ, இஞ்சி சாறாகவும் உட்கொள்ளலாம்.
News August 11, 2025
உக்ரைனில் அமைதி திரும்ப உதவுவதாக PM மோடி உறுதி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி PM மோடியுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ரஷ்யா – உக்ரைன் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளங்கியதாகவும், இரு நாடுகளிடையே அமைதி ஏற்பட அனைத்து உதவிகளையும் செய்வேன் எனவும் உறுதி அளித்ததாக PM மோடி தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். புதின் இந்தியா வரவுள்ள நிலையில், ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதை குறைக்க ஜெலன்ஸ்கி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
News August 11, 2025
கனமழை வெளுக்கும்.. கவனமா இருங்க மக்களே!

சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தஞ்சை, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை சென்னை, செ.பட்டு, திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால், இரவில் வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே!