News September 15, 2024
தாம்பரத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்

இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால்,தாம்பரத்திலிருந்து கூடுதலாக பேருந்து சேவைகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பயணிகள் நலம் கருதி இன்று கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Similar News
News October 17, 2025
ஜிஎஸ்டி சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் தீப ஒளி திருநாள் விழாவை கொண்டாட சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்கின்றனர். இதனால் இன்று முதலே ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
News October 16, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு இன்று (அக்.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
கிளாம்பாக்கம்: தீபாவளி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் (அக்.16) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக வழக்கமான மாநகர பேருந்துகளுடன் 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இன்று முதல் அக்.19ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வெளியூர் பேருந்துகள் செல்லும் இடம், அவை நிற்கும் பிளாட்பாரம் எண் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.