News September 15, 2024
அனுபவம் இல்லா நிர்வாகிகள்.. தாங்குவாரா விஜய்?

தவெக கட்சியை ஆரம்பித்த விஜய், கையோடு மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார். தற்போது வரை அவர் கட்சியில் மாநாடு நடத்திய அனுபவம் கொண்ட யாரும் இல்லை. அனைவரும் அனுபவம் இல்லாத நிர்வாகிகள்தான். இதனால், வெளியில் இருந்து வரும் அழுத்தங்களை அவர் தனி ஆளாக தாங்குவாரா? என அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து உங்கள் அபிப்ராயத்தை கீழே பதிவிடுங்கள்.
Similar News
News October 18, 2025
இன்று முதல் 110 சிறப்பு ரயில்கள்

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்புகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு இன்று 24 ரயில்கள், நாளை 19 ரயில்கள், 20-ம் தேதி 23 ரயில்கள், 21-ம் தேதி 25 ரயில்கள், 22-ம் தேதி 19 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
News October 18, 2025
Business Roundup: 3-வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்

*லாக்கர் வாடகை கட்டணத்தை பஞ்சாப் தேசிய வங்கி குறைத்துள்ளது. *இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகின. *அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ₹88.03-ஆக உள்ளன. *சர்வதேச ரயில் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம். *அரிய வகை கனிமங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய கூடுதல் முக்கியத்துவம்.
News October 18, 2025
9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 23-ம் தேதி மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது