News September 15, 2024

குரூப் 2 தேர்வு: திண்டுக்கல்லில் 5778 பேர் ஆப்சென்ட்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வினை 16,915 பேர் எழுதிய நிலையில் 5778 பேர் எழுதவில்லை. விண்ணப்பத்திருந்த 22,693 பேரில் 16,915 தேர்வு எழுதினர். 5778 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையத்தில் கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார். சப் கலெக்டர் கிசான் குமார், பி.ஆர்.ஓ. நாக ராஜ பூபதி, தாசில்தார் ஜெயபிரகாஷ் உடனிருந்தனர்.

Similar News

News October 22, 2025

திண்டுக்கல்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (SHARE IT)

News October 22, 2025

திண்டுக்கல் இளைஞர்கள் கவனத்திற்கு!

image

திண்டுக்கல்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் சேருவதற்கு ’www.tahdco.com’ என்ற முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

திண்டுக்கல்: கணவனால் பிரச்னையா? உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9942511127-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!