News September 15, 2024
விழுப்புரம்: ரூ.356.91 கோடி மதிப்பீட்டில் தீர்வு

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி பேசுகையில், “நான் முதன்மை மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்ற 2021 நவம்பா் முதல் 2024, ஜூன் மாதம் சுமாா் 31 ஆயிரம் வழக்குகளுக்கு ரூ.356.91 கோடி மதிப்பீட்டில் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டிருக்கிறது என கூறினார்.
Similar News
News December 5, 2025
டிசம்பர். 6இல் விழுப்புரம் வருகிறார் உதயநிதி ஸ்டாலின்

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (டிச.6) ஆம் விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். அப்போது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அருகே அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலையை திறந்து வைக்க உள்ளார். இதைதொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறவுள்ள திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
News December 4, 2025
எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினம் 2025 முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (டிச.04) கையொப்பமிட்டு துவக்கி வைத்தார். உடன் உதவி ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
News December 4, 2025
விழுப்புரம் மக்களே நீண்ட ஆயுள் பெற இந்த கோவிலுக்கு போங்க!

விக்கிரவாண்டி அகஸ்தீஸ்வரர் கோயில் தொன்மையான பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தத கோவில் ஆகும். இந்த கோவிலில் மூலவர் அகஸ்தீஸ்வரர், தாயார் தர்மசவர்த்தினி அருள்கின்றனர். இங்கு வந்து பிரதோஷ காலத்தில் சிவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அத்துடன், திருமணத் தடை நீங்கவும், கல்வியில் சிறக்கவும் பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள்.


