News September 15, 2024
அரக்கோணம் ரயில் சேவையில் மாற்றம்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் 16,18ம் தேதி மதியம் 12 முதல் 2மணி வரையிலான ரயில் சேவைகளில் பகுதி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு காலை 10 மணி மற்றும் 11.45 மணிக்கு புறப்படும் ரயில் இரு நாட்களும் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Similar News
News July 7, 2025
ராணிப்பேட்டை பள்ளிகளுக்கு இன்று (ஜூன் 7) விடுமுறை !

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று (திங்கட்கிழமை ) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சந்திரகாலா உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, இன்று (ஜூலை 7) சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News July 7, 2025
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையிடம் இருந்து அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஜூலை 06) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்.
News July 6, 2025
மேல்விஷாரத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேவையான சிகிச்சை வசதி இல்லாததால் நோயாளிகளை வேலூர் அல்லது வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். இவ்வாறு மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான சிகிச்சை வசதிகள் இல்லாததை கண்டித்து ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.