News September 15, 2024
பாமகவை அழைக்காதது ஏன்? விசிக பதில்

மது ஒழிப்பு மாநாட்டிற்கு பாமகவை அழைக்காதது ஏன் என்பது குறித்து விசிக விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி துணை பொது செயலாளர் S.S. பாலாஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பாமக பேசும் மது ஒழிப்பில் விசிகவுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினார். சாதிய அரசியலால் ஏற்பட்டுள்ள அவப்பெயரை மறைக்க மது ஒழிப்பு குறித்து பாமக பேசுகிறது, அதனாலேயே சாதிய, மதவாத கட்சிகளை அழைக்கவில்லை என்றார்.
Similar News
News January 13, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு புதிய அறிவிப்பு

தமிழகத்தில் ஒரு சிலருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் சிரமம் இருந்தது. குறிப்பாக, ரேஷன் கடைகளில் முதியவர்களின் விரல் ரேகை பதிவு செய்யும் போது, ஒப்புதல் பெற தாமதம் ஏற்படுவதால், அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, விரல் ரேகை சரிபார்ப்பில் பாதிப்பு ஏற்பட்டால், கண் கருவிழி ரேகை கருவியை பயன்படுத்தி, பொங்கல் தொகுப்பு வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
News January 13, 2026
16 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, திருவாரூர், திருச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
News January 13, 2026
விஜய் ரசிகர்களை எச்சரித்த ‘பராசக்தி’ தயாரிப்பாளர்

‘பராசக்தி’ படம் குறித்து விஜய் ரசிகர்கள் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தேவ் ராம்நாத் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த ஆண்டில் ரிலீசான ஒரு படத்திற்கும் இதேபோன்று அவர்கள் செய்தனர். உங்கள் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் நாங்களா தடுத்தோம்? நாங்கள் தான் ரிலீஸ் தேதி முதலில் அறிவித்தோம். விஜய் ரசிகர்களின் செயல் யாருக்கும் நல்லதல்ல என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


