News September 15, 2024
ஓடும் ரயிலில் செல்போன் திருடிய இருவர் கைது

கோவையில் இருந்து சென்னை செல்லக்கூடிய சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பள்ளி ஆசிரியர் மகேந்திரன் என்பவர் பயணித்துள்ளார். அந்த ரயில் திருப்பூர் வந்தபோது, ஜன்னல் வழியே அவரது செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பைக்குந்தா மற்றும் சந்தனு சக்ரியர் ஆகியோரை நேற்று கைது செய்து செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News August 27, 2025
திருப்பூர்: உங்கள் ஊரிலேயே அரசு வேலை!

▶️திருப்பூர் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 90 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ▶️ விண்ணபிக்க <
News August 27, 2025
திருப்பூர்: ரூ.24,500 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

திருப்பூர் மக்களே..,இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில்(BRBNMPL) பிராசஸ் அசிஸ்டெண்ட், மேனேஜர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News August 27, 2025
திருப்பூரில் மின் தடை அறிவிப்பு!

திருப்பூர்: அருள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதிபாளையம், சேடர்பாளையம் ரோடு, உப்பிலிபாளையம், அண்ணாநகர், செட்டிதோட்டம், ஓம்சக்தி நகர், அய்யம்பாளையம், நொச்சிபாளையம், சென்னிமலைபாளையம், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், பல்லடம் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9:00 – 4:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.