News September 15, 2024

விழுப்புரத்தில் 5372 பேர் ஆப்சென்ட்

image

தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு நேற்று நடைபெற்றது. விழுப்புரம் வட்டப் பகுதிகளில் இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 14,920 பேரில் 11,181 போ் மட்டுமே எழுதினா். திண்டிவனம் வட்டப் பகுதிகளில் 6,160 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 4,527 போ் மட்டுமே எழுதினா். மொத்தம் 21,080 பேரில் 15,708 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்ற நிலையில், 5,372 போ் தோ்வெழுத வரவில்லை.

Similar News

News January 23, 2026

விழுப்புரத்தில் குறைதீர் முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில், (24.01.26) அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய அட்டை கோருதல் போன்ற விண்ணப்பங்களை பொதுமக்கள் நேரில் வழங்கித் தீர்வு காணலாம். எனவே இதில் பொதுமக்கள் பங்குபெற்று பயபெற்றுக்கொள்ளவும்.

News January 23, 2026

விழுப்புரம்: இளம் பெண் மர்ம சாவு!

image

விக்கிரவாண்டி அருகே, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த காவ்யா (30) தினசரி மாத்திரை உட்கொண்டு வந்தார். நேற்று முன்தினம் மாத்திரை சாப்பிட்டு உறங்கியபோது வாயில் நுரை தள்ளி மயங்கினார். உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 23, 2026

விழுப்புரம் இன்று இரவு ரோந்து விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட காவல் அதிகாரியை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் செய்து உதவி பெறலாம்

error: Content is protected !!