News September 15, 2024
குமரி: இன்வெட்டர் பாக்ஸில் பதுங்கிய கட்டுவிரியன்

குமரி மாவட்டம் லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் வீட்டில் பாம்பு ஒன்று புகுந்து இன்வெட்டர் பாக்ஸில் பதுங்கியுள்ளது. அவர் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு 5-அடி நீள கட்டு விரியன் வகை என கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து பாம்பை லாவகமாக பிடித்த வீரர்கள் பாம்பை சாக்கு மூட்டையில் அடைத்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்து சென்றனர்.
Similar News
News October 18, 2025
குமரி: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் பட்டியல்

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை அறிவிப்பின்படி, இன்று (17.10.2025) இரவு மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் சிறப்பு ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில், தக்கலை, மணிக்கூண்டன், களியக்காவிளை, கன்னியாகுமரி பகுதிகளில் SSI, HC மற்றும் GR அதிகாரிகள் பணி புரிவர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
News October 17, 2025
முன்னாள் படை வீரர்கள் தொழில் முனைவராக ரூ.4 கோடி மாணியம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று விடுத்த செய்தி குறிப்பில், குமரியில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் 45 முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்குவதற்கு 4 கோடியே 10 லட்சம் ரூபாய் மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் முன்னாள் படைவீரர்கள் தொழில் முனைவோராக மாற விருப்பம் தெரிவித்த மாவட்டம் குமரி மாவட்டம் ஆகும் என்றார்.
News October 17, 2025
குமரியில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக குமரியில் அக். 20ம் தேதி தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.