News September 15, 2024
காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தின் காவல்துறையின் சார்பில் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக 1098 என்ற எண்ணை தொடர்பு தொடர்பு கொண்டு, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு, நேற்றைய வலைதளப்பக்கத்தில் இந்த விழிப்புணர்வு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
மீளவிட்டானில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்த ஆடு மீட்பு

தூத்துக்குடி அருகே மீளவிட்டான்பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ளதரை மட்டநீர்த்தேக்க தொட்டியில் அதே பகுதி செல்வராஜ் என்பவரின் ஆடு தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. உடன் தகவலின் பேரில் வேலைக்கு நிலை அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தத்தளித்துக் கொண்டிருந்த ஆட்டை பத்திரமாக மீட்டு ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
News August 9, 2025
தூத்துக்குடி இரவு நேர காவல் துறை உதவி எண்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (08.08.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும், 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த எண்ணை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறது.
News August 8, 2025
தூத்துக்குடி: FIRST TIME வேலைக்கு போறீங்களா 15,000 CONFIRM!

தூத்துக்குடி இளைஞர்களே EPFO-வின் ஊழியர் வைப்பு நிதி சார்ந்த காப்பீடு (ELI) திட்டத்தின் கீழ், ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கபடுகிறது. முதல்முறையாக EPFOவில் பதிவுசெய்து, மாதத்திற்கு 1 லட்சத்திற்குள் சம்பாதிக்கும் புதிய ஊழியர்களுக்கு ரூ.15000 வழங்கப்படும். இரண்டு தவணைகளாக வழங்கபடுகிறது. மேலும் தகவல்களுக்கு தூத்துக்குடியில் உள்ள EPFO அலுவலகத்தை அனுகுங்க. இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க!