News September 14, 2024
எம்.எல்.ஏ இல்லத் திருமண விழாவில் முன்னாள் முதல்வர்

அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு ரவி இல்ல திருமண வரவேற்பு இன்று மாலை மணவாள நகரில் நடந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், கே. சி. வீரமணி, பி. வி.ரமணா, அதிமுக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ ஹரி உள்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்
Similar News
News January 13, 2026
திருவள்ளூரில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணப்பிக்கலாம். <
News January 13, 2026
திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்!

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், ஊரக வளர்ச்சி அலகில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நடைபெற்ற தொகுதி IV தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் செய்யப்பட்ட 15 இளநிலை உதவியாளர்களுக்கு, நேற்று(ஜன.12) மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
News January 13, 2026
திருவள்ளூர் கலெக்டரிடம் 270 மனுக்கள்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜன.12) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 96, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 56, வேலைவாய்ப்பு வேண்டி 45, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 40, இதர துறைகள் சார்பாக 33 என மொத்தம் 270 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.


