News September 14, 2024
நான் முதல்வன் திட்ட செயல்பாடுகள் குறித்த கூட்டம்

தமிழக அரசின் நான் முதல்வன் உயர்வுக்கு படி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு செயலாளர் தரேஸ் அகமது தலைமையிலும் கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் அரசு செயலாளர் பேசுகையில், மாணவர்களின் 100 சதவீத பள்ளி இடைநிற்றலை கண்டறிந்து அனைவரையும் உயர்கல்வி படிக்க வைப்பதில் தமிழகத்தில் நீலகிரி முதல் மாவட்டமாக திகழ வேண்டும் என்றார்.
Similar News
News August 14, 2025
நீலகிரியில் இன்று முகாம்கள் நடைபெறும் இடங்கள்!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம், 6 தாலுகாக்களிலும் நடைபெற்று வருகிறது. இன்று (ஆகஸ்ட் 14) நடைபெறும் முகாம்களின் விவரங்கள்: குன்னூர் நகராட்சி – பாரதியார் மண்டபம், ஊட்டி நகராட்சி – ஸ்ரீனிவாசா மண்டபம், சோலூர் பகுதி – உரட்டி சமுதாயக் கூடம், கெங்கரை பகுதி – கெங்கரை சமுதாயக் கூடம், குந்தா பகுதி – கூர்மையாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெறுகிறது.
News August 14, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (13.08.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
News August 13, 2025
நீலகிரியில் நாளை முகாம்கள் நடைபெறும் இடங்கள்!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம், 6 தாலுகாக்களிலும் நடைபெற்று வருகிறது. நாளை (ஆகஸ்ட் 14) நடைபெறும் முகாம்களின் விவரங்கள்: குன்னூர் நகராட்சி – பாரதியார் மண்டபம், ஊட்டி நகராட்சி – ஸ்ரீனிவாசா மண்டபம், சோலூர் பகுதி – உரட்டி சமுதாயக் கூடம், கெங்கரை பகுதி – கெங்கரை சமுதாயக் கூடம், குந்தா பகுதி – கூர்மையாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெறுகிறது.