News September 14, 2024
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1689 வழக்கு விசாரணை

தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் வட்ட சட்டப் பணிகள் குழுவினால் இன்று நீதிமன்ற வளாகத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வங்கிகளில் கடனுக்காக 1689 வழக்குகள் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை வழக்குகள் மூலமாக ரூ 178029846/- க்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News July 6, 2025
தேனியில் இலவச Tally பயிற்சிக்கு வரவேற்பு

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜூலை 18 முதல் கணினி மயமாக்கப்பட்ட கணக்கியல் (டேலி) பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம் என மைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

தேனி மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <
News July 6, 2025
தேனியில் கிணற்றில் பிணமாக கிடந்த கூலித்தொழிலாளி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள அரப்படிதேவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ்(60). தேவதாஸ் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடலை க.விலக்கு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.