News September 14, 2024
நெல்லையில் 5,627 தேர்வு எழுதவில்லை

TNPSC குரூப் 2 குரூப் 2a தேர்வுகள் இன்று நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 20,223 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 14,596 பேர் தேர்வு எழுத வந்தனர். 5,627 பேர் தேர்வு எழுத வரவில்லை, மொத்தம் விண்ணப்பித்த நபர்களில் 72.5% பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அதிகபட்சமாக அம்பை, சேரன்மகாதேவி வட்டாரத்தில் 75% பேர் தேர்வு எழுதினர்.
Similar News
News November 15, 2025
நெல்லை: பதக்கங்களை குவித்த அரசுப் பள்ளி மாணவன்

மாநில அளவிலான வில்வித்தை போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற நெல்லை, வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஊ.லெபின் சுதர்ஷன் மாநில அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றார். அவரை தலைமை ஆசிரியர் டேனியல் கிப்சன், பொறுப்பாசிரியர் இராஜேஷ்வரி. வகுப்பு ஆசிரியர் தியாகராஜன் ஆகியோர் பாராட்டினார்கள்.
News November 15, 2025
ஆசிரியர் தகுதி தேர்வு: 9.30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு: நெல்லை மாவட்டத்தில் 15 மற்றும் 16ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடைபெறுகின்றன தேர்வு காலை 9.30 மணிக்கு மேலாக தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். அதன் பின்னர் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் தேர்வு பனியில் சுமார் 1300 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
ஆசிரியர் தகுதி தேர்வு 11,640 பேர் எழுதுகின்றனர்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளது. அதில் முதல் தாள் 11 தேர்வு மையங்களிலும் இரண்டாம் தாள் 35 தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமாக 11,640 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். இந்த தேர்வுப் பணியில் 1300 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


