News September 14, 2024
உதயநிதி நேரில் சென்று மரியாதை

காமெடி நடிகர் கருணாகரனின் தந்தையும், மத்திய அரசின் உளவுத்துறை ஓய்வுபெற்ற அதிகாரியுமான காளிதாஸ் (77) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெறும் என கருணாகரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
ஷமி ஏன் அணியில் இடம்பெறவில்லை?

ஷமி ஃபிட்டாக இருந்திருந்தால், இந்நேரம் ஆஸி.,க்கு எதிரான தொடரில் அணியில் இடம் பிடித்திருப்பார் என தேர்வுக்குழு தலைவர் அகர்கர் தெரிவித்துள்ளார்.
வீரர்கள் எப்போதும் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றும், கடந்த காலங்களில் ஷமியுடன் பல முறை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, ஃபிட்னஸ் குறித்து வீரர்களிடம் பேச வேண்டியது தேர்வுக்குழுவின் கடமை என <<18008638>>ஷமி<<>> தெரிவித்து இருந்தார்.
News October 18, 2025
உருட்டுக் கடை திமுக Vs அதிமுகவை திருடிய இபிஎஸ்

அதிமுகவை திருட்டுத்தனமாக கைப்பற்றிவிட்டு திமுகவை குறை சொல்லலாமா என இபிஎஸ்-க்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார். முதல்வரை விமர்சிப்பதாக நினைத்து அல்வா இல்லாத பஞ்சு பாக்கெட்டுகளை கொடுத்து திருட்டு அல்வா கொடுத்ததாகவும் விமர்சித்துள்ளார். முன்னதாக, 2021-ம் ஆண்டு தீபாவளியின்போது 525 வாக்குறுதிகளை வெளியிட்ட திமுக அதில் 10% கூட நிறைவேற்றாமல் <<18031093>>உருட்டுவதாக கூறி அல்வா<<>> பாக்கெட் வழங்கியிருந்தார்.
News October 18, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,000 குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.18) ஒரே நாளில் சவரனுக்கு ₹2,000 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹250 குறைந்து ₹11,950-க்கும், சவரன் ₹95,600-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில், இன்று தலைகீழாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.