News September 14, 2024
மாவட்ட ஆட்சியரின் நெகிழ்ச்சி பதிவு

சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஒரே அலுவலகத்தில் மகன் மென்பொருள் பொறியாளர், தந்தை தச்சர், வறுமை மற்றும் சமூக அந்தஸ்தில் உள்ள தலைமுறை இடைவெளிகளை கல்வி எவ்வாறு இணைக்கிறது என்பதை இந்த புகைப்படம் காட்டுகிறது” என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தனது X தளத்தில் தந்தை மகன் ஒரே அலுவலகத்தில் பணியாற்றும் புகைப்படத்தை பதிவு செய்து கருத்து தெரிவித்துள்ளார்.
Similar News
News January 14, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மூதாட்டியை சோதனை செய்தபோது கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிச்சையம்மாள் (60) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் துணை கமிஷனர் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் துணை போக்குவரத்து கமிஷனர் வெங்கட்டரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து பயணிகள் 90257 23800 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் தகவல், தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கும் வரும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்