News September 14, 2024
‘தளபதி 69’ படத்தின் அறிவிப்பு வெளியானது

விஜய் நடிக்க உள்ள கடைசிப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஹெச்.வினோத் இயக்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கிறார். படத்தின் பெயர் குறிப்பிடப்படாமல் ‘தளபதி 69’ என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘The Torch Bearer Of Democracy’ என்று குறிப்பிட்டு, தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு அக்டோபரில் இப்படம் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 3, 2025
நாளை பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

பொதுத்தேர்வு தேதி எப்போது வெளியிடப்படும் என 10, +2 மாணவர்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி நாளை வெளியாகிறது. பொதுத்தேர்வு தேதியை அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை காலை 10.30 மணிக்கு அறிவிக்க இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 10, +2, கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியை அவர் அறிவிக்க உள்ளார். என்ன மாணவர்களே, ரெடியா!
News November 3, 2025
Worldcup நாயகிகளுக்கு வைர நெக்லஸ் பரிசு

மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினருக்கு, குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், MP-யுமான கோவிந்த் தோலாகியா சிறப்பு பரிசுகளை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் BCCI-க்கு எழுதிய கடிதத்தில், இந்திய அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் வைர நெக்லஸ்களை பரிசளிக்கவும், அவர்களின் வீடுகளில் சோலார் பேனல்களை பொருத்தவும் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
விருதுகளை அள்ளிக்குவித்த மஞ்சும்மல் பாய்ஸ்

2024ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் விழாவில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் விருதுகளை அள்ளிக்குவித்துள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குநர் (சிதம்பரம்), சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் (சௌபின் ஷாஹிர்) , சிறந்த கலை இயக்குனர், சிறந்த பாடலாசிரியர் (வேடன்), சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த Sound Design மற்றும் Sound Mixing ஆகிய 9 விருதுகளை வென்றுள்ளது.


