News September 14, 2024
அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி திறப்பு

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி மைதானத்தில் 30ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத், பர்கூர் எம்எல்ஏ தே.மதியழகன் உள்ளிட்ட பலர் திறந்து வைத்தனர்.
Similar News
News November 2, 2025
கிருஷ்ணகிரி: தாமதமாக வந்த அமைச்சரால் பரபரப்பு

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில்,மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று (நவ.01) காலை 11 மணியளவில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் அமைச்சர் திட்டத்தைபற்றி பேசிவிட்டு மதியம் 3 மணியளவில் கூட்டத்தை முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் தி.மு.க நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 2, 2025
ஓசூர்: ஏரியில் மூழ்கி மாணவன் பலி

கிருஷ்ணகிரி, ஓசூர் அருகே, பாகலுார் அம்பேத்கர் நகரை சேர்ந்த பாண்டியன் மகன் மணிசங்கர் (13). நேற்று (நவ.01) விடுமுறை நாளையொட்டி பாகலுார் பட்டாளம்மன் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். ஆழமான பகுதிக்கு சென்ற மாணவன் மணிசங்கர், நீரில் மூழ்கி பலியானார். பின் ஓசூர் தீயணைப்புத்துறையினர் நேற்று மாலை, 4:00 மணிக்கு மாணவன் சடலத்தை மீட்டனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 2, 2025
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் வேலை, ரூ.30,000 சம்பளம்!

ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பிரிவில் மொத்தம் 64 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு, கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.பி.ஏ., / எம்.பி.ஏ ஆகிய பட்டம் பெற்று இருக்கவேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. சி.ஐ.டி வளாகம், தரமணி நவ.15 தேதி நேர்காணல் நடைபெற உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க.


