News September 14, 2024
திருச்சி: 8888 பேர் தேர்வு எழுத வரவில்லை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வை திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 108 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இன்று தேர்வு எழுத 24,220 பேர் வருகை தந்தனர்.மேலும் 8888 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது,100 சதவீதத்தில் 73.15 பேர் வருகை தந்துள்ளனர்.மீதமுள்ள 26.85 பேர் தேர்வு எழுத வரவில்லை.
Similar News
News October 16, 2025
திருச்சி: மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை

திருச்சி மாவட்டம், கருங்குளத்தைச் சேர்ந்த திருமேணியம்மாள் என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மூதாட்டியின் வீட்டிற்கு வந்த அவரது உறவினர் ஆரோக்கியசாமி என்பவர், தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து, நகைகளை பறித்துச் சென்றுள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து ஆரோக்கியசாமியை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
News October 16, 2025
திருச்சி: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டம், மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் அக்.,18-ம் தேதி காலை 11 மணியளவில், மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது எரிவாயு தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
திருச்சி: ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி: Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.