News September 14, 2024
வேலூரில் TNPSC தேர்வுக்கு 3464 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று (செப்டம்பர் 14) நடந்தது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 48 மையங்களில் குரூப்2, குரூப் 2ஏ தேர்வை 13139 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 9675 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 3464 தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 11, 2025
வேலூரில் மனித கழிவுகளை அகற்ற இனி ரோபோக்கள்

வேலூர் மாநகராட்சியில், மனித கழிவுகளை அகற்றும் பணியில் இனி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த வேலையைச் செய்ய ரோபோட்டிக் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த இயந்திரங்கள் பணியாளர்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும். விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News August 11, 2025
வேலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு

வேலூர் மாவட்டத்தில் வாழை, கத்திரி, மஞ்சள், தக்காளி போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்ய தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. இயற்கை சீற்றங்கள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இந்த காப்பீடு பாதுகாப்பளிக்கும் என தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News August 11, 2025
வேலூரில் ஆதார் கார்டு உள்ளவர்கள் கவனத்திற்கு…

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <