News September 14, 2024
எழும்பூரில் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் போராட்டம்

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு தனியாக அமைச்சரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 1, 2025
சென்னை உயர் நீதிமன்றம் கேடு விதித்து உத்தரவு

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் 1400 குடியிருப்புகள் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதித்தது சட்டவிரோதம் என மனு தாக்கல் செய்யப்பட்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதியைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்றும் நவம்பர் 12ம் தேதிக்குள் பதில் அளிக்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
News November 1, 2025
சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் இன்று (நவ.1) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மோன்தா புயல் காரணமாக கடந்த 28-ம் தேதி சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய இன்று பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற உள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News November 1, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் நேற்று (31.10.2025) இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.


