News September 14, 2024

ராமநாதபுரம் மாவட்ட கலைப் போட்டிகள் தொடக்கம்

image

கலை பண்பாட்டுத் துறை, ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் ராமநாதபுரம் DD விநாயகர் தொடக்கப் பள்ளியில் மாவட்ட அளவிலான 5-8, 9-12, 13-16 வயதிற்குட்பட்டோர் கலைப்போட்டிகள் இன்று காலை தொடங்கியது. ஆயிர வைசிய மகாசபை தலைவர் ஜெயராமன் தொடங்கி வைத்தார். பரதம், ஓவியம், பாட்டு, கிராமிய நடனப் போட்டியில் மாணாக்கர் பங்கேற்றனர். ஆசிரியர்கள் முனீஸ்வரி, அனந்தமுத்துமாரி, பாலாஜி, ஆகாஷ், தனசேகரன் போட்டிகளை நடத்தினர்.

Similar News

News November 13, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் (நவ.13) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News November 13, 2025

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – இயக்குநர் ஆய்வு

image

ராமநாதபுரம், ராமேஸ்வரம் நகரில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலைய இயக்குநரும், ராமநாதபுரம் மாவட்ட வெள்ள நிவாரணப் பணி கணிப்பாய்வு அலுவலருமான சரவணன் இன்று ஆய்வு செய்தார். கோட்டப் பொறியாளர்கள் முருகன் (கட்டுமானம் & பராமரிப்பு) பிரசன்ன வெங்கடேசன் (தரக்கட்டுப்பாடு) நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

News November 13, 2025

ராமநாதபுரம் OK BOZ நிறுவனத்தில் வேலை

image

ராமநாதபுரத்தில் உள்ள OK BOZ என்ற நிறுவனத்தில் OFFICE ADMIN பணியிடத்திற்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் ஆண், பெண் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழஙக்கப்படும். அனுபவம் மற்றும் முன்அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். 12th முதல் அதற்கு மேல்படித்தவர்கள் இந்த மாதம் 27-க்குள் <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!