News September 14, 2024
புதுச்சேரியில் 1464 மாணவர்கள் தேர்வு

புதுச்சேரியை பூர்வீமாக கொண்டு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி பட்டியலை சுகாதார துறை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 1464 மாணவர்களது பெயர்கள், அவர்கள் எடுத்த மதிப்பெண்ணுடன் இடம் பெற்றுள்ளது. பொது பிரிவினை சேர்ந்த மாணவி தர்ஷினி 99.99 சதவீத மதிப்பெண்ணுடன் புதுச்சேரி மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
Similar News
News October 27, 2025
புதுச்சேரி: மோசடி கும்பலுக்கு துணை போனால் நடவடிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி. ஸ்ருதி வெளியிட்டுள்ள செய்தியில், வங்கி ஊழியர்கள் வங்கிக் கணக்கு துவங்குவதற்கு முன், அவர்கள் அளிக்கும் ஆவணங்களான ஜி.எஸ்.டி. நம்பர், ஆர்.ஓ.சி. ஆகியவை உண்மையா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் அதனை மீறி சைபர் மோசடி கும்பலுக்கு வங்கிக் கணக்கு துவக்கி கொடுப்பது, அல்லது வேறு ஏதேனும் வழியில் துணை போவது தெரிந்தால், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
News October 26, 2025
புதுச்சேரி: 10th போதும்! அரசு வேலை ரெடி!

Eklavya Model Residential Schools-யில் (EMRS) இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 7267
1. வயது: 30 வயதிற்குகுட்பட்டவர்கள்
2. சம்பளம்: ரூ.18,000–ரூ.2,09,200
3. கல்வித் தகுதி: 10th, 12th, PG Degree, B.Ed மற்றும் பட்டப்படிப்பு
4. கடைசி தேதி: 28.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 26, 2025
புதுச்சேரி: 44 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை

புதுச்சேரி காவல்துறை தலைவர் டி.ஜி.பி அறிவுறுத்தலின் படி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில், நேற்று மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. அதன்படி பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து 66 புகார்கள் பெறப்பட்டு, 44 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள புகார்கள் மீது அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


