News September 14, 2024
வெயில் சுட்டெரிக்கும்: RMC

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2°-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் RMC குறிப்பிட்டுள்ளது. இதேபோல், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது அசௌகரியம் ஏற்படக்கூடும் என்றும் RMC கூறியுள்ளது. உங்கள் பகுதியில் வெயில் எப்படி? கமெண்ட் பதிவிடுங்க
Similar News
News October 30, 2025
கம்பேக் கொடுப்பாரா சூர்யா?

சரிந்து கிடக்கும் மார்கெட்டை மீண்டும் உயர்த்தும் வேலையில் சூர்யா இறங்கியுள்ளார். தற்போது இந்திய சினிமாவில் சாமி- கமர்சியல் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த லைனில்தான் ‘கருப்பு’ தயாராகியுள்ளது. அதை தொடர்ந்து, பான் இந்திய அளவில் கவனம் ஈர்த்த தெலுங்கு இயக்குநர் ‘லக்கி பாஸ்கர்’ வெங்கி அட்லூரி, மலையாள இயக்குநர் ‘ஆவேசம்’ ஜீத்து மாதவன் ஆகியோருடனும் கை கோர்க்கிறார். கம்பேக் கொடுப்பாரா சூர்யா?
News October 30, 2025
வரலாற்றில் முதல் இந்திய பெண்.. புனே பெண் சாதனை!

சர்வதேச மோட்டார்ஷிப் சாம்பியன்ஷிப்பில் Ferrari காரை ஓட்டும் முதல் இந்திய பெண் என்ற பெருமையை புனேவை சேர்ந்த டயானா பூண்டோல்(32) நவம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரை Middle East-ல் நடைபெறும் Ferrari Club Challenge தொடரில் அவர் பங்கேற்கிறார். Ex- ஸ்கூல் டீச்சரான டயானா, 2024-ல் the MRF Saloon Cars Championship தொடரில், நாட்டின் முன்னணி ஆண் ரேஸர்களை தோற்கடித்து பட்டம் வென்றிருந்தார்.
News October 30, 2025
33 நாள்களாக நெல் கொள்முதல் இல்லை: அன்புமணி

நெல் கொள்முதல் குறித்து அரசு பதிலளித்தாலும், எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், வட மாவட்டங்களில் 33 நாள்களாக நெல் கொள்முதல் நடைபெறவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொள்முதல் சிறப்பாக நடைபெறுவதாக பேசும் CM-க்கு, இதுபற்றி தெரியவில்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வட மாவட்டங்கள் வேறு பகுதியில் இருப்பதாக CM நினைக்கிறார் போல என்றும் விமர்சித்துள்ளார்.


