News September 14, 2024

சேலம் திமுக நிர்வாகிகளுக்கு மா.செ அழைப்பு

image

சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.எம் செல்வகணபதி Mp வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்குதாரமங்கலம் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் நடைபெறுகிறது. இதையடுத்து அண்ணாவின் சிலைக்கு மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. பின்னர் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்படுகிறது.

Similar News

News July 4, 2025

சேலம் வீரர் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தல்!

image

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற Para Armwresling போட்டியில், சேலம் மாவட்டத்தை சார்ந்த புஷ்பராஜ் என்பவர் கலந்து கொண்டு, 2 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். அவருக்கு வலுத்தூக்கும் சங்கத்தினர், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

News July 4, 2025

சேலம் – திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

திருச்செந்தூர் முருகன் திருக்கோயிலில் வரும் ஜூலை 07- ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு சேலத்தில் இருந்து திருச்செந்தூருக்கு 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜூலை 06- ஆம் தேதி முதல் ஜூலை 08- ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News May 8, 2025

கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்!

image

சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் உரிய பட்டப்படிப்பு, கால்நடை, மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடன் வரும் மே 22- ஆம் தேதி நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!