News September 14, 2024
சேலம் அருகே விபத்து: ஒருவர் பலி

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் காமராஜர் நகரைச் சேர்ந்த ஈஸ்வரி (45) தனது மகன் மணிகண்டன் (15) உடன் மொபட்டில் நிலவாரப்பட்டி உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை சர்வீஸ் சாலையில் ரோட்டை கடப்பதற்காக முயன்ற போது அவ்வழியே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News July 8, 2025
பெண்கள் சேவை மையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ஆத்தூர் சகி பெண்கள் சேவை மையத்தில் வேலைக்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள நபர்கள் 15.07.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம். அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0427-2413213 அழைக்கவும் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.SHAREit
News July 8, 2025
சேலத்தில் வேலை: பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க!

ஆத்தூர் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு காலியாக உள்ள மைய நிர்வாகி , தொழில்நுட்ப வல்லுநர், பல்நோக்கு உதவியாளர்,காவலர் உள்ளிட்ட தற்காலிக பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சேலத்தை சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News July 8, 2025
ஏற்காடு ரயிலை கடத்துவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

ஈரோடு-சென்னை சென்ட்ரல் இடையே தினசரி இயக்கப்படும் ஏற்காடு விரைவு ரயில், சேலம் மற்றும் காட்பாடி வழியாகச் செல்கிறது. இந்தநிலையில் நேற்று இரவு 9 மணிக்கு சென்னை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மிரட்டல் அழைப்பு வந்தது. அதில் ஏற்காடு ரயிலை கடத்தப்போவதாக மிரட்டினார்.இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சபரீசன் என்பவர் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.