News September 14, 2024
சிவகங்கையில் குழந்தை திருமணம் குறைவு

சிவகங்கை மாவட்டத்தில் 2024-2025ம் ஆண்டில் இதுவரை 47 குழந்தை திருமணம் நடந்துள்ளது. 18க்கு உட்பட்ட சிறுமிகள் 23 பேரும், 2022-2023ம் ஆண்டில் 33 சிறுமிகளும் கர்ப்பம் அடைந்துள்ளனர். 2022-23ல் 80 பேருக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளது. அதே போன்று 2023-2024ல் 73 சிறுமிகள் கர்ப்பம் அடைந்தும், 55 குழந்தை திருமணம் நடந்துள்ளது. கடந்த 2 ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு குறைந்துள்ளது.
Similar News
News November 5, 2025
சிவகங்கைக்கு புதிய முதன்மை கல்வி அலுவலர் நியமனம்

சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் கடந்த ஆறு மாதமாக காலியாக இருந்ததால், தற்போது கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உள்ள க.பாலதண்டாயுதபாணி என்பவரை சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இன்று நியமிக்கப்பட்டிருப்பதாக, பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
கண்மாய் குத்தகை எடுக்க விண்ணப்பிக்கலாம்

அமராவதி புதூர், செஞ்சை நாட்டார், சங்கராபுரம் மற்றும் பாதரக்குடி ஆகிய கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 04575-240848 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது adfsivaganga@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவோ தொடர்பு கள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
சிவகங்கை: 12th முடித்தால் ரூ.71,900 சம்பளத்தில் வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


