News September 14, 2024
கீழடி சிவப்பு நிற பானைகள் குறித்து ஆய்வு செய்ய வலியுறுத்தல்
கீழடி 10ம் கட்ட அகழாய்வில் இரண்டு அடி உயரத்தில் அடர் சிவப்பு நிற பானை கண்டறியப்பட்டுள்ளது. இந்த அகழாய்வு நடந்து வரும் இடத்தின் அருகே ஏழாம் கட்ட அகழாய்வு நடத்தப்பட்டு அதில் இதே போன்ற சிவப்பு நிற கொள்கலன் கண்டறியப்பட்டது. கீழடி அகழாய்வில் தொடர்ச்சியாக கிடைத்து வரும் அடர் சிவப்பு நிற பானைகளின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News November 20, 2024
மானாமதுரை: சிறப்பு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்
மானாமதுரை முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு பிரிவு சார்பில் வரும் நவ.27ஆம் தேதி வரை சிறப்பு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மற்றும் நவீன முறையில் பெண்களுக்கான் லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. எனவே தேவைப்படுவோர் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 20, 2024
சிவகங்கையில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
சிவகங்கை உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
News November 20, 2024
பெண்ணை வன்புணர்வு செய்த 5 பேருக்கு குண்டாஸ்
மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 19.09.2024 அன்று இளையான்குடி பகுதியைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த விளாக்குளத்தை சேர்ந்த முத்துக்குமார், வில்வகுமார், ராமசாமி, அஜய்குமார், தவமுனியசாமி ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை குண்டர் தரப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித் நேற்று (நவ.19) உத்தரவிட்டார்.