News September 14, 2024
மானியக்கடன் பெற தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரத்தில் இணை மானியத் திட்டத்தின் கீழ் மானியக்கடன் பெற தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். தொழில் முனைவோா் வரும் செப். 19-ல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வாழ்ந்து காட்டுவோம் மதி சிறகுகள் தொழில் மையத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8667746682 எண்களில் அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
காஞ்சிபுரத்தில் இருவர் துடிதுடித்து பலி!

ஒரகடம் அடுத்த பண்ருட்டி தோப்புத் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் மகேந்திரன்(19), பாலமுருகன்(19). இவர்கள், தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், நேற்று(ஜன.19 வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவு பைக்கில் இருவரும் வாலஜா நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது, ஒரகடம் அருகே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 19, 2026
காஞ்சிபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் ஜனவரி 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 2,000 பணியிடங்களுக்கான நேர்காணலை நடத்த உள்ளன. 10, 12, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்தவர்கள் இதில் பங்கேற்கலாம். ஷேர் பண்ணுங்க!
News January 19, 2026
காஞ்சிபுரம்: உங்க குறைகளை புகார் செய்ய ஒரு கிளிக் போதும்!

காஞ்சி மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<


