News September 14, 2024

அரக்கோணம் அருகே ரயிலில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்

image

டாட்டா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அரக்கோணம் வந்தபோது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயிலின் பொதுப்பெட்டியில் ஏறி திடீர் சோதனை நடத்தினர் . அப்போது ரயிலின் சீட்டுக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை சோதனையிட்டதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News October 17, 2025

ராணிப்பேட்டை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில்<> இங்கே கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News October 17, 2025

அரக்கோணம்: போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த மூவர்!

image

அரக்கோணம், தக்கோலம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த சர்வன்குமார், தன்வீர் & சின்டுயாதவ் என்ற பெண் ஆகியோர் மத்திய காவலர் பணியில் சேர தேர்வாகினர். மூவரும், தக்கோலம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், ஜனவரியில் பயிற்சியில் சேர்ந்தனர். இவர்கள் சான்றிதழ்களின் உண்மை தன்மை ஆய்வு செய்தபோது, அவை போலி என தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 17, 2025

சோளிங்கரில் போராட்டம்!

image

சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள் & அரசு ஊழியர் அமைப்பின் கூட்டு நடவடிக்கை கவுன்சில் (ஜாக்டோ-ஜியோ) அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும் எனவும், மேலும் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

error: Content is protected !!