News September 14, 2024
சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியா

4ஆவது தெற்காசிய (U20) ஜூனியர் தடகள போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. 30 வகை பந்தயங்கள் கொண்ட இந்த போட்டியில், இந்தியா 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்கள் வாரி குவித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இலங்கை (35) 2ஆவது இடத்தையும், வங்கதேசம் (3) 3ஆவது இடத்தையும் பெற்றன. பாக்,, பூடான் நாடுகள் வெறுங்கையுடன் நாடு திரும்பின.
Similar News
News October 28, 2025
World சந்தையில் தங்கம் விலை மீண்டும் கடும் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. ஒரே நாளில் 1 அவுன்ஸ்(28g) $119 குறைந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ₹10,492 குறைந்துள்ளது. கடந்த 22-ம் தேதி $240 குறைந்திருந்த நிலையில், மீண்டும் பெரிய அளவில் சரிந்து $3,994-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் எதிரொலித்து தங்கம் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
News October 28, 2025
உள்நோக்கத்துடன் ஒருநாள் முன்னர் தான் அனுமதி: தவெக

பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஒருநாள் முன்னர்தான் உள்நோக்கத்துடன் அனுமதி அளிக்கப்பட்டதாக தவெக, சென்னை HC-ல் தெரிவித்துள்ளது. கரூர் துயரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, முன்கூட்டியே அனுமதி அளித்தால் அசம்பாவிதங்கள் நடைபெறாது என கூறியது. நிபந்தனைகள் விதிப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டியது. இதையடுத்து எல்லா கட்சிகளுக்கும் முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும் என HC அறிவுறுத்தியுள்ளது.
News October 28, 2025
சனி தோஷத்தை விரட்ட..

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ
சனிப் ப்ரசோதயாத்
பொருள்:
ஓம், கொடியில் காக்கையை வைத்திருப்பவரை நினைத்துப் பார்க்கட்டும், ஓ, உள்ளங்கையில் வாளை ஏந்தியவரே, சனீஸ்வரர் என் எண்ணங்களை ஒளிரச் செய்யுங்கள். SHARE IT.


