News September 14, 2024
சிதம்பரத்தில் மாணவியை ஆபாசமாக சித்தரித்த மருத்துவர் கைது

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் சதீஷ், சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் இவர். அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவியை காதலிப்பதாக வீடியோ காலில் பேசி அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மாணவி சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் மகளிர் காவல் ஆய்வாளர் அமுதா வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.
Similar News
News October 23, 2025
கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News October 23, 2025
கடலூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (அக்.,23) காலை 8.30 மணி நிலவரப்படி பெலாந்துறை 32.5 மி.மீ, கீழ்செருவாய் 26 மி.மீ, மே.மாத்தூர் 23 மி.மீ, வேப்பூர் 19.1 மி.மீ, காட்டுமைலூர் 19 மி.மீ, தொழுதூர் 16 மி.மீ என மாவட்டம் முழுவதும் 173.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. உங்கள் பகுதியில் மழையா கமெண்ட் பண்ணுங்க!
News October 23, 2025
கடலூர்: நாளை எந்தெந்த இடங்களில் முகாம் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.,24) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியானது. கடலூர் ஓடி என்.எஸ் மகால், வடலூர் ஆர்.சி.சர்ச் மண்டபம், தர்மநல்லூர் மேல்நிலைப் பள்ளி, காடாம்புலியூர் ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடங்க பள்ளி, தொழுதூர் மேல்நிலைப் பள்ளி, குமாரபுரம் கிருஷ்ணசாமி கல்லூரியில் நடைபெற உள்ளது.