News September 14, 2024

புதுவை மீனவர்களுக்கு கட்டுப்பாடு

image

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் இஸ்மாயில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் கருக்குவலை பயன்படுத்தி மீன்பிடிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்களின் வலைகள், படகுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது. எனவே உச்சநீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News December 18, 2025

புதுவை: செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

image

கோரிமேடு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில், தன்வந்திரி காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் கோரிமேடு பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த வல்லரசு, பெங்களூரைச் சேர்ந்த இப்ராகிம் என இருவரை ரகசியத் தகவலின் பேரில் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் மற்றும் பைக், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News December 17, 2025

புதுச்சேரிக்கு சிறப்பு நிதி வழங்க கோரிக்கை

image

டிட்வா’ புயலால் ஏற்பட்ட கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலத்துக்கு, சிறப்பு நிதி நிவாரணம் வழங்க வேண்டும் என MP செல்வகணபதி, நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார். புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால், மத்திய அரசு உடனடியாக சிறப்பு மானியங்கள் வழங்கி, மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

error: Content is protected !!