News September 14, 2024
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் ஆட்சியரிடம் வாழ்த்து

சென்னையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கடந்த 5ஆம் தேதி டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற 9 ஆசிரியர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் விருதுகளை காண்பித்து நேற்று(செப்.13) வாழ்த்து பெற்றனர்.
Similar News
News October 22, 2025
மானாமதுரையில் 4 வழி சாலையில் தொடரும் உயிர்பலி

மானாமதுரையில் புது பஸ் ஸ்டாண்டை ஒட்டி செல்லும் 4 வழிச்சாலையில் பைபாஸ் ரயில்வே கேட் இருந்ததை தொடர்ந்து தல்லாகுளம் முனீஸ்வரர் கோயில் அருகே இருந்து மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் முன்பு வரை மேம்பாலம் அமைக்கப்பட்டது. மானாமதுரை நகர்ப் பகுதியை கடந்து செல்லும் 4 வழிச்சாலையில் தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களால் உயிர் பலி அதிகரித்து வருகிற நிலையில் ரவுண்டானா அமைக்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
News October 22, 2025
BREAKING: சிவகங்கை பள்ளிகளுக்கு விடுமுறை

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் சிவகங்கை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக சிவகங்கையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது.
News October 21, 2025
சிவகங்கையில் இங்கெல்லாம் நாளை மின்தடை

கண்ணங்குடி, கப்பலுார், அனுமந்தக்குடி, கண்டியூர், நாரணமங்கலம், கே.சிறவனுார், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களூர், மன்னன்வயல், தாழையூர்,தெக்கூர், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, துவார், முறையூர், எஸ்.எஸ்.கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர், திருக்களம்பூர், வார்ப்பட்டு உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின்தடை