News September 14, 2024
பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற கிரிவலம் மாதம் மாதம் பௌர்ணமி தினத்தன்று நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வருகின்ற புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 17.09.2024 செவ்வாய்க்கிழமை காலை 11.27 முதல் 18.09.2024 காலை 9.10 வரை உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 13, 2025
திருவண்ணாமலை அரசு பள்ளி ஆசிரியருக்கு டெல்லியில் விருது

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி
பட்டதாரி தமிழ் ஆசிரியர் இரா.முத்து கம்பன் அவர்கள், சர்வதேச அளவிலான Global Best Teacher Role Model Award விருதைப் பெறுகிறார். வரும் 24.08.2025 அன்று, புது டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.
ஏற்கனவே இவர், மாநில அளவில் தமிழக அரசின் Dr. ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
News August 13, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று(ஆக.13) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
தி.மலையில் கள ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் திருவண்ணாமலை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக.13) கள ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட தொழில் மையம் மூலமாக தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று செயல்பட்டுவரும் பல் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.